RadhaKrishna
மானாட மயிலாட விண்ணோடு முகிலாட காற்றோடு இலையாட மலரோடு வண்டாட மதிமயக்கும் மாலையிலே மண்ணுலகம் எழிலாட தேவர்கள் உளமாறத் துதிபாடிக் கொண்டாட கருவண்ணன் மணிவண்ணன் கார்குழலில் விளையாட சலங்கைகள் ஜதியாக புன்னகையே இசையாக தேன்சுரக்கும் இதழ்களிலே தீங்கனியே சுவையாக மெல்லிடையே வடிவாக மென்மையெனும் உருவாக மெய்மறந்து கண்ணனுடன் இசைபாடும் ராதா ! காண்பவர் அனைவரின் உள்ளம்கவ ராதா !! |