அன்னை
For all those missing their mom, wrote this a couple of years back for a friend:
பெற்றவள் பூமுகம் நரைகூடி போனாலும்
புன்னகைப் புருவங்கள்
உனைபார்த்து சுறுங்காது!
இவ்வுலகம் வெயிலாகி சுட்டெரித்து சாய்த்தாலும்
அன்னையோர் நினைவு மட்டும்
என்றென்றும் நீங்காது!!
தினமவள் நினைவுகள் நறுமலர் உதிர்க்க
உடனில்லை என்றெண்ணம்
ஒருபோதும் தோன்றாது!
நெஞ்சம் முழுவதும் உன் அன்னை உடனிருக்க
தூரமென்ன தேசமென்ன
எத்தடையும் கிடையாது!!
2 Comments:
Nice one.
நெஞ்சம் முழுவதும் உன் அன்னை உடனிருக்க
தூரமென்ன தேசமென்ன
எத்தடையும் கிடையாது!! ---- Superb!!!!
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home