Ennaval (Tamil)
வடிவான அவள் உருவம்,
மெலிதானதொரு சருமம்,
அன்போடு என் முன் ஒரு பெண்.
நூல் போல் அவள் இடைகள்,
மயில் போல் அவள் நடைகள்,
ஜாடை பேசும் இரு கண்.
விரல்கள் சுடும் குழல்கள்,
கரங்கள் எனும் மலர்கள்,
என் மனம் பாடும் ஒரு பண்.
இனிக்கும் இரு இதழ்கள்,
எனக்கு அவள் இலையேல்,
என் உடல் சேரும் இந்த மண்.
1 Comments:
chk this site to blog in Tamil..
ur tamil poems wil luk good.
http://bhashaindia.com/Community/CommunityHome.aspx
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home